'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

கடந்த அக்டோபர் மாதம் இடுக்கி மாவட்டம் அடிமாலியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன, பலர் உயிரிழந்தனர். அதில் சந்தியா என்கிற பெண் நிலச்சரிவில் சிக்கி தனது ஒரு காலை இழந்தார். இவருக்கு மம்முட்டியின் அறக்கட்டளை சார்பாக கொச்சியில் உள்ள ராஜகிரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவருக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டுள்ளது. கொச்சியில் படப்பிடிப்பில் ஒன்றில் கலந்து கொண்டு நடித்து வரும் மம்முட்டி மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தியாவின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
மேலும் சில மாதங்களுக்கு முன்பே சந்தியாவிற்கு சொந்த வீடு ஒன்றும் வழங்கப்படும் என மம்முட்டி உறுதி அளித்து இருந்தார். அவரது பரிந்துரையின் பேரில் மலங்கர ஆர்த்தடாக்ஸ் செரியன் சர்ச் நிர்வாகம் சார்பாக நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள 100 வீடுகளில் சந்தியாவிற்கும் ஒரு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலையும் சந்தியாவிடம் மம்முட்டி நேரில் தெரிவித்தார்.




