Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நுகர்வு, சுவை திறனை இழந்த மம்முட்டி

19 பிப், 2026 - 10:42 IST
எழுத்தின் அளவு:
Mammootty-has-lost-his-ability-to-consume-and-taste
Advertisement

மம்முட்டி தற்போது அதிகமான பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். ஆனால் அவற்றில் அவர் தளர்ந்து காணப்படுகிறார். இதற்கு காரணம் அவர் கடந்த ஒரு ஆண்டாக சென்னையில் தீவிர சிகிச்சை பெற்றார். அவருக்கு ஒரு விதமான புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து மீண்டு விட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கி விட்டார்.

இந்த நிலையில் ஒரு மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியிருப்பதாவது : ‛‛எனக்கு சில காலமாக வாசனை மற்றும் சுவை அறிந்து கொள்ளும் உணர்வு இல்லாமல் போனது. எந்த வாசனையாக இருந்தாலும் அதை உணர முடியவில்லை. சாப்பிட்டால் உணவின் சுவை தெரியவில்லை. கொரோனா பாதிப்பாக இருக்கலாமோ என எண்ணியபோது, பரிசோதனைக்கு பிறகு வேறு பிரச்னை என்பது தெரிந்தது. நமக்கு பார்க்கும் திறன், கேட்கும் திறன் இவை இரண்டும் கடவுள் தந்த வரம். அதேபோல்தான் சுவை திறனும். இப்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறேன்.

நாம் யாரையாவது சத்தத்தைக் குறைக்கச் சொன்னாலோ அல்லது மென்மையான குரலில் பேசச் சொன்னாலோ, அது நம்மால் கேட்க முடியும் என்பதால்தான். கேட்க முடியாதவர்கள் ஒருபோதும் அப்படிச் சொல்ல மாட்டார்கள். மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றைக் கேட்க விரும்புகிறார்கள். கேட்பது ஒரு தெய்வீக வரம்.

இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன்'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? ... 'அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்' : இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத் 'அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்' : இசை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Shekar - Mumbai,இந்தியா
20 பிப், 2026 - 09:02 Report Abuse
Shekar கேட்பதற்கு இது சாதாரணமாக தோன்றினாலும், இது ஒரு கொடுமையான வியாதி. இவர்களுக்கு பசிக்கும் ஆனால் இரண்டு வாய்க்கு மேல் சாப்பிட முடியாது. எதை சாப்பிட்டாலும் மண்ணை சாப்பிடுவது போல் இருக்கும். அதனால் உணவு எடுக்கும் அளவு குறைந்து உடல் மெலியும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap