'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர் அனிருத். தனது பாடல்கள் மற்றும் பின்னணி இசையை பல முன்னணி நிறுவனங்கள் மூலம் வெளியிட்டு வந்தார். தற்போது அவர் 'அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்' என்ற இசை நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
இதுபற்றி அனிருத் கூறும்போது, “படைப்பாற்றல், உரிமை, கலாச்சார தாக்கத்தை மையமாகக் கொண்டு இசை வணிகத்தை உருவாக்கும் எனது பயணத்தின் தொடக்கமாக இந்த 'அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்' அமைந்துள்ளது. எனது திரைப்பட மற்றும் திரைப்படம் அல்லாத படைப்புகளுக்கான தளமாக இந்நிறுவனம் செயல்படும். அதோடு வெளிச்சத்துக்கு வர தகுதியான புதிய மற்றும் திறமையான கலைஞர்களையும் இந்நிறுவனம் ஆதரிக்கும்.
வலுவான இசைத் தொகுப்பை உருவாக்கி, தனித்துவமான குரல்களை அறிமுகப்படுத்தி, பிராந்திய பாப் கலாச்சாரத்தை முன்னோக்கி நகர்த்தும் வலுவான பிராண்டை உருவாக்குவதே எங்கள் நோக்கம். தொடக்க கட்டமாக, எனது தேர்ந்தெடுக்கப்பட்ட அசல் சவுண்ட் டிராக்குகளும், எனது அனைத்து பாப் இசை வெளியீடுகளும் இதன் கீழ் வெளியாகும்” என்றார்.




