விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரான எஸ்.பி.முத்துராமனுக்கு சமீபத்தில் தமிழக அரசு கலைஞர் கலை வித்தகர் விருது கொடுத்தது. அந்த விருதை பெற்றவர் தனக்கு முதல் பட வாய்ப்பு கொடுத்தவருமான இயக்குனர் வி.சி.குகநாதனிடம் கொடுத்து நன்றி சொல்லியிருக்கிறார்.
இது குறித்து வி.சி.குகநாதன் கூறுகையில், ‛‛இயக்குனர் எஸ்பி முத்துராமன் விருது வழங்கப்பட்டதை காணொளி வாயிலாக கண்டுகளித்த எனக்கு கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த விருதினை நானே பெற்றிருந்தால் கூட இவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருக்க மாட்டேன். இதுவரை நான் சண்டை போடாத ஒரே மனிதர் அவர்தான். என்னோடு வேலை செய்த உதவியாளர்கள் பல பேர் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியிருக்கிறார்கள். அதில் பஞ்சு அருணாச்சலம் முக்கியமானவர். அவர்கள் அனைவருமே ஏதோ ஒரு கட்டத்தில் எனக்கு நன்றி சொல்லி இருக்கிறார்கள்.
எஸ்பி முத்துராமன் என் நண்பர். அதனால் அவர் எப்போதும் எனக்கு நன்றி சொன்னதில்லை. ஆலோசனைகள் சொல்லி இருக்கிறார். அறிவுரை சொல்லி இருக்கிறார். ஆத்மார்த்தமான அன்போடு பழகி இருக்கிறார். ஏவிஎம்மில் இருந்து ராஜினாமா செய்து விட்டு ஊருக்குப் போக இருந்த எஸ்பி முத்துராமனை தடுத்து நிறுத்தி திரைப்பட இயக்குனர் ஆக்கும் பாக்கியத்தை பெற்றவன் நான்.
நண்பர் முத்துராமன் எப்போதும் எனக்கு நன்றி சொன்னதே இல்லை. நான் அதனை எதிர்பார்த்தது இல்லை. கலைஞர் விருது பெற்றவர் என் வீட்டுக்கு வந்தார். விருதை என் கையில் கொடுத்து இதற்கெல்லாம் நீங்கள் தான் முதல் காரணம் என்றார். இது எனக்கு மட்டுமான விருது இல்லை, என் வளர்ச்சியில் பங்கேற்ற அனைவருக்குமானது என்று சொன்னார். அடுத்து இதைப் பார்க்க ஏவி.எம் சரவணன் சார் இல்லையே என இருவரும் வருத்தப்பட்டோம். இறுதியாக சார் நன்றி சார் என என் கைகளைப் பிடித்தபடி முத்துராமன் சொன்னார். நான் கலங்கிப் போய்விட்டேன். சின்ன வயதில் நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவரிடம் காட்டினேன். அவர் கண்கள் கலங்கின'' என்று அவர் உருக்கமாக கூறியிருக்கிறார்.




