ஏப்ரல் 27ல் தொடங்குகிறது சேயோன் | அபிஷேக் பச்சனின் வரலாற்று படத்தில் கெஸ்ட் ரோலில் சல்மான்கான் | கென் கருணாஸ் சினிமாவின் சொத்து : யூத் படம் பார்த்துவிட்டு ரிஷப் ஷெட்டி பாராட்டு | பிளாஷ்பேக்: பாலைவனத்தில், பணத்தை வாரி இறைத்து, படப்பிடிப்பு நடத்திய எம் ஜி ஆரின் வெற்றிச் சித்திரம் | 17 நாட்களிலேயே 200 கோடி வசூலித்த 'வாழ 2' | பேட்ரியாட்டில் நாலு ஹீரோ இல்லை, இரண்டு பேர் தான் : மம்முட்டி | ஒரு வாரத்தில் நடிகர் பார்த்திபனுக்கு 'சாதி மதம் அற்றவர்' சான்றிதழ்! ஐகோர்ட் உத்தரவு | 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, மிஸ்டர் எக்ஸ்' படங்களின் வசூல் விவரம்! | ‛கலை அரசன்', தனுஷிற்கு புதுபட்டம் | கதை நாயகனாக நடிக்கும் காளி வெங்கட் |

அபிஷேக் நமா இயக்கத்தில், ஜுனைத்குமார், அபே இசையமைப்பில், விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'நாகபந்தம்' படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு யு டியுப் தளத்தில் வெளியானது. வளரும் நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ள இந்தப் படத்தின் டீசருக்குக் கிடைத்துள்ள வரவேற்பு திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
யு டியூபில் மட்டும் 30 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஆன்மிகம் கலந்த படங்களை இந்திய சினிமா ரசிகர்கள் பெரிதும் விரும்பிப் பார்கக் ஆரம்பித்துள்ளனர். தெலுங்குப் படமாக உருவாகி, மற்ற மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாக உள்ள இப்படத்திற்கான வரவேற்பு படத்தின் வியாபாரத்திற்கு பெரிதும் உதவும். இந்த வருட கோடை விடுமுறையில் இப்படம் வெளியாக உள்ளது.