மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

ஜேடி ஜெர்ரி இயக்கிய 'லெஜெண்ட்' என்ற படத்தில் அறிமுகமானவர் தொழிலதிபர் சரவணன். அதையடுத்து தற்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'லீடர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் பாயல் ராஜ்புட், ஆண்ட்ரியா, ஷியாம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மிரட்டலான சண்டைக் காட்சிகள் அதிரடியான வசனங்கள் என்று ஆக்சன் கதையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. முக்கியமாக 'ஜனநாயகன்' படத்தின் டிரைலரில் தனது கையில் தீப்பந்தத்துடன் விஜய் காட்சி கொடுத்தது போன்று இந்த 'லீடர்' படத்தின் டீசரில் லெஜெண்ட் சரவணனும் கையில் தீப்பந்தத்துடன் காட்சி கொடுக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த லீடர் படத்தின் டீசர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.