Advertisement

சிறப்புச்செய்திகள்

வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன்

16 பிப், 2026 - 01:56 IST
எழுத்தின் அளவு:
Trisha-condemns-BJP-leaders-speech
Advertisement

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சில நாட்களுக்கு முன்பாக, நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவருமான விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோரை தொடர்புபடுத்தி பேசியிருந்தார். அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு நடிகை திரிஷா, தனது வழக்கறிஞர் நித்யேஷ் நடராஜ் மூலமாக கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: மாநில அரசியலில் உயர்ந்த நிலை வகிக்கும் ஒருவரின் இழிவான மற்றும் அருவருக்கத்தக்க கருத்தை எதிர்பார்க்கவில்லை. நான் எந்த அரசியல் கட்சி உடனும் தொடர்பில் இல்லை. அரசியல் கட்சியில் சேரும் எண்ணமும் இல்லை. இதற்கு முன்பும் தொடர்ந்து தெரிவித்ததுபோல், அரசியல் விவகாரங்களில் எப்போதும் நடுநிலையான நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வருகிறேன்.

என்னுடைய கலைத் திறமையால் மட்டுமே என்னை மதிப்பிட வேண்டும்; அரசியல் தொடர்புகள் என்ற குற்றச்சாட்டுகளால் அல்ல. தனிப்பட்ட வாழ்க்கையைப் பொதுவெளியில் விவாதப் பொருளாக்கக் கூடாது என்பது பொதுவான நெறிமுறை. உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது பொறுப்புணர்ச்சியுடனும் சமநிலையுடனும் நடந்து கொள்ள வேண்டும். எனது பெயரை எனக்கு தொடர்பில்லா விவகாரங்களில் இழுக்க வேண்டாம். இவ்வாறு அதில் திரிஷா கூறியுள்ளார்.

வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன்
நடிகை திரிஷா குறித்து பேசியதற்காக வருந்துகிறேன். வாய் தவறி வந்துவிட்டது. தனிநபர் விமர்சனங்களை நான் அனுமதிப்பதில்லை. இதற்காக யாரேனும் வருத்தப்படுவார்களே ஆனால் உண்மையில் நான் அதற்காக மனதார வருத்தம் தெரிவிக்கிறேன் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பிப்ரவரி 13 ரிலீஸ் படங்கள் : இன்றைய நிலவரம் என்ன ?பிப்ரவரி 13 ரிலீஸ் படங்கள் : இன்றைய ... இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Senthoora - Sydney,ஆஸ்திரேலியா
17 பிப், 2026 - 07:02 Report Abuse
Senthoora பயில்வான் ரங்கநாதன் திரிஷா- விஜய் பற்றி சொன்ன விடியோவுக்கு திரிஷாவால் கண்டனம் தெரிவிக்க முடியுமா?
Rate this:
கொங்கு தமிழன் பிரசாந்த் இவளோ பெரிய கண்டனம் தெரிவித்த த்ரிஷா அவர்கள், நயினார் அண்ணன் சொன்ன விடயம் பொய் என்று மறுக்கவில்லையே?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap