20 அடி ஆழத்தில் ஆடையின்றி நடித்த ஆர்யா | பிளாஷ்பேக்: மாற்றங்கள் பல கடந்து, மகத்தான வெற்றியைப் பதிவு செய்த எம் ஜி ஆரின் “ரிக்ஷாக்காரன்” | போதைப்பொருள் சீரழிவை மையப்படுத்தி உருவாகியுள்ள 'முதற்கனல்' | சமந்தா படத்தின் முதல் சிங்கிள் ஏப்., 19ல் வெளியீடு | ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புராண படம் | 'ஜனநாயகன்' ரிலீஸ் எப்போது? அந்த 3 இயக்குனர்களும் பிஸியாமே? | ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் |

2026ம் வருடம் ஆரம்பமாகி ஏழு வாரங்கள் கடந்த நிலையில் கடந்த வாரம் பிப்ரவரி 13ம் தேதி ‛மை லார்ட், பூக்கி' உள்ளிட்ட ஏழு நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின. இதற்கு முன்பு ஜனவரி 30ம் தேதியும் இப்படி ஏழு நேரடி தமிழ்ப் படங்கள் வெளிவந்துள்ளன.
வாராவாரம் நான்கைந்து படங்கள் சராசரியாக வந்தாலும் அதிகபட்சமாக முதல் மூன்று நாட்களுக்குத்தான் ஓரளவிற்கு அந்தப் படங்களுக்கு ரசிகர்கள் வருகிறார்கள். வார வேலை நாள் ஆரம்பமாகும் திங்கள் கிழமைகளில் அவற்றிற்கான முன்பதிவு கூட மிக மோசமாக மாறிவிடுகிறது.
கடந்த வாரம் வெளியான படங்களின் இன்றைய ஆன்லைன் முன்பதிவு நிலவரத்தைப் பார்த்தால் அதிர்ச்சியாக உள்ளது. பல தியேட்டர்களில் ஒரு வரிசை கூட டிக்கெட் முன்பதிவு செய்யப்படவில்லை. இதனால், பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்படும் நிலை கூட வரலாம்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்து அவர்கள் இன்று பதவியேற்கிறார்கள். இதற்கடுத்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் ஞாயிறு பிப்ரவரி 22ம் தேதி நடைபெற உள்ளது.
அதன் பிறகாவது தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய சங்கங்களான இந்த சங்கத்தினர் இணைந்து பேசி படங்கள் வெளியிடுவது குறித்து ஒரு முக்கிய முடிவை எடுப்பார்களா என திரையுலகில் உள்ளவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.




