பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் |

ஜீவா நடித்த ‛தலைவர் தம்பி தலைமையில்' படம் வெற்றி பெற்று, பல கோடி லாபத்தை கொடுத்துள்ளது. இப்போது அந்த படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளது. அங்கே போனி கபூர் ரீமேக் செய்ய ரைட்ஸ் வாங்கியுள்ளார். டிடிடி தயாரிப்பாளர் கண்ணன் ரவியும், போனி கபூரும் நண்பர்கள் என்பதால் இந்த விஷயம் உடனடியாக நடந்துள்ளது.
ஹிந்தியில் யார் நடிக்கப் போகிறார்கள், யார் இயக்கப் போகிறார்கள் என்பது இன்னமும் முடிவயாகவில்லை. தமிழில் வெற்றி பெற்ற படங்கள் அவ்வப்போது ஹிந்தியில் ரீ மேக் ஆகின்றன. ஆனால், மவுனகுரு, தெறி, மாநகரம், கோலமாவு கோகிலா, காஞ்சனா உள்ளிட்ட படங்கள் அங்கே வெற்றி பெறவில்லை. ஹிந்தி ரசிகர்களின் ரசிப்புதன்மை வேறு மாதிரியாக இருப்பதால் தமிழ் கதைகளுக்கு அங்கே வரவேற்பு இல்லை. கஜினி தான் ஹிந்தியில் ரீமேக் ஆகி பெரிய ஹிட் ஆனது.
ஓடிடி தாக்கம் அதிகமானபின் தமிழ் படங்கள் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் டப்பாகி விடுகிறது. அதனால் முன்புபோல தமிழ் கதைகள் இந்த மொழிகளிலும் ரீமேக் ஆவதில்லை.