'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை அடுத்து அஜித்தின் அடுத்த படத்தையும் தயாரிக்க இருப்பவர் போனி கபூர். வலிமை படம் அடுத்த வாரத்தில் திரைக்கு வரும் நிலையில் தற்போது புரமோஷன் பணிகளை தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் போனி கபூர் அளித்த ஒரு பேட்டியில், அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மிகவும் பெருந்தன்மையான மனதை கொண்டவர்கள். அஜித்தின் படங்கள் வெளியாகும்போது விஜய் ரசிகர்கள் அதனை பாராட்டுகிறார்கள். அதேபோல் விஜய்யின் படங்கள் வெளியாகும்போது அஜித் ரசிகர்கள் அதனை பாராட்டுகிறார்கள். அந்த வகையில் அஜித் -விஜய்யை போலவே அவர்களது ரசிகர்களும் பெருந்தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று அவர் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அஜித் படங்கள் குறித்து விஜய் ரசிகர்களும், விஜய் படங்கள் பற்றி அஜித் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் எப்போதும் மோதலில் ஈடுபட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.