10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

துணிவு படத்தை அடுத்து மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித்குமார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. இந்த படத்தில் நடித்து முடித்ததும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் தனது 63வது படத்தில் அஜித் குமார் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த படத்தை முடித்ததும் ஏற்கனவே தன்னை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து நான்கு படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்கி முடித்திருக்கும் சிறுத்தை சிவா அப்படத்தின் இறுதி கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த பணிகளை முடித்ததும் அஜித் நடிக்கும் படத்தின் ஆரம்ப கட்டப் பணிகளில் அவர் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் அஜித்தும், சிறுத்தை சிவாவும் ஐந்தாவது முறையாக இணையப் போகிறார்கள்.