ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, லைலா, நந்தா உள்ளிட்டோர் நடிப்பில் 2002ல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛மெளனம் பேசியதே'. யுவனின் இசையும், பாடல்களும் இந்த படத்தின் வெற்றியில் ஒரு பங்காக இருந்தது. காதலர் தினத்தையொட்டி நேற்று இப்படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் நடித்த சூர்யா, திரிஷா ஆகியோர் படம் குறித்து அதிகமாக பேசவில்லை. ஒரு வீடியோ மட்டும் வெளியிட்டு அமைதியாக இருந்துவிட்டனர்.
ஆனால் இன்னொரு ஹீரோயினாக நடித்த லைலா மும்பையில் இருந்து சென்னை வந்து படம் குறித்து பேசினார். சென்னையில் நடந்த முதல் ஷோவுக்கு சென்று ரசிகர்களுடன் படம் பார்த்தார். படம் குறித்து ஆர்வமாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். தமிழில் தொடர்ந்து நடிக்க லைலா ஆர்வமாக இருக்கிறார். அதனால் கோலிவுட் மீது பாசமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.




