பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் |

தமிழக அரசு சார்பில் கலைத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. 2016 முதல் 2022ம் ஆண்டுகளுக்கான சினிமா திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. சூர்யா, விஜய் சேதுபதி, தனுஷ், கார்த்தி, பார்த்திபன், நயன்தாரா, ஆண்ட்ரியா, கீர்த்தி சுரேஷ், ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
விருது வழங்கும் விழா இன்று(பிப்.,13) ல் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விருதுகளை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், வடிவுக்கரசி, வெண்ணிற ஆடை நிர்மலா, லதா, எஸ்வி சேகர், சுதா கொங்கரா, பார்த்திபன், பாடகர் வேல்முருகன், தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு, ஜே சதீஷ் குமார், அதிதி பாலன், மனிஷா யாதவ், ரஹ்மான், பிரியங்கா (ரோபா சங்கர் சார்பாக மனைவி), மதுமிதா, லோகேஷ் கனகராஜ், சாம் சிஎஸ், ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட கலைஞர்கள் விருது பெற்றனர்.
சிறந்த படத்துக்கான முதல் பரிசு ரூ.2 லட்சம், 2ம் பரிசு: ரூ.1 லட்சம், மூன்றாம் பரிசு: 75 ஆயிரம், சிறப்புபரிசாக 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படத்திற்கு சிறப்பு பரிசாக ரூ.1.25 லட்சம் ரொக்கம் வழங்கப்படும்.சிறந்த நடிகர், நடிகை, தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு ஒரு சவரன் பதக்கம் வழங்கப்பட உள்ளது.