பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

மலையாள சினிமாவின் பெண் இயக்குனரான கீது மோகன்தாஸ் ஏற்கனவே 'மூத்தான்' என்கிற படத்தை இயக்கியவர். தற்போது பான் இந்தியா ஹீரோ யஷ்ஷை நாயகனாக வைத்து 'டாக்சிக்' எனும் படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். இதை மிகப்பெரிய பான் இந்திய படமாக உருவாக்கி வருகிறார்.
இந்த நிலையில் டாக்சிக் படத்திற்கு பிறகு கீது மோகன்தாஸ் அடுத்து இயக்கவுள்ள படத்திற்கான பணிகளையும் தற்போது துவங்கி உள்ளாராம். இந்த படம் பெண் முதன்மை கதாபாத்திரம் கொண்ட படம் என்பதால் இதில் டாக்சிக் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள கியாரா அத்வானியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.