ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ள 'கூஷ்கோர் பண்டட்' என்ற படம் நெட்பிளிக்சில் நேரடியாக வெளியாகிறது. நீரஜ் பாண்டே இதை தயாரித்து உள்ளார். ரிதேஷ் ஷா இயக்கியுள்ளார். இதில் மனோஜ் பாஜ்பாய் ஊழல் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இப்படத்தின் தலைப்புக்குப் ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தலைப்புக்கு எதிராக, வடமாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. தயாரிப்பாளர் நீரஜ் பாண்டே, இயக்குநர் ரித்தேஷ் ஷா, நடிகர் மனோஜ் பாஜ்பாய் ஆகியோரின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன.
இப்படத்துக்கு தடை விதிக்கக்கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது படத்தின் தலைப்பை மாற்றுவதாக தயாரிப்பு நிறுவனமான நீதிமன்றத்தல் தெரிவித்தது. இதை தொடர்ந்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது நீதிமன்றம். கூஷ்ஷோர் போலீஸ் (ஊழல் போலீஸ்) என தலைப்பு மாற்றப்படும் என்று தெரிகிறது.