ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'விடாமுயற்சி' படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியானது. அசத்தலான மேக்கிங் என ரசிகர்களால் பாராட்டப்பட்டாலும் யு-டியூபில் டிரைலர் பெரிய அளவில் பார்வைகளைப் பெறவில்லை.
விஜய் நடிப்பில் வெளிவந்த 'லியோ' பட டிரைலர் யு டியூப் தளத்தில் 24 மணி நேரத்தில் 31 மில்லியன் சாதனைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை 'விடாமுயற்சி' டிரைலர் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஜித் நடித்து வெளிவந்த 'துணிவு' பட டிரைலர் 24 மணி நேரத்தில் பெற்ற 24 மில்லியன் பார்வைகளில் பாதியைக் கூட 'விடாமுயற்சி' டிரைலர் பெறாமல் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
பொங்கல் விடுமுறையில் ரசிகர்கள் டி டியூப் பக்கம் போகவில்லையா அல்லது 'ஆர்கானிக்' ஆக மட்டுமே இதன் பார்வைகள் வந்துள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. 24 மணி நேரத்தில் அதிகப் பார்வைகளைப் பெற்ற டிரைலர்களின் வரிசையில் 'விடாமுயற்சி' டிரைலர் 9 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்று 15வது இடத்தில் உள்ளது.
அஜித்தின் 'வலிமை' டிரைலர் கூட 24 மணி நேரத்தில் 11 மில்லியன் பார்வைகளைப் பெற்றது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.