சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

நடிகை ராஷி கண்ணா அறிமுகமானது ஹிந்தி படத்தில் தான் என்றாலும் அதைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் சில வருடங்களில் நடித்தவர், பின்னர் தமிழிலும் குறிப்பிடத்தக்க நடிகையாக மாறி தொடர்ந்து இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். அதேசமயம் ஹிந்தியில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார்.
இந்த நிலையில் தான் கடந்த வருடம் முதல் ஹிந்தி படங்களில் மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார் ராஷி கண்ணா. அது மட்டுமல்ல தென்னிந்திய படங்களில் இனி கவனம் செலுத்தாமல் பாலிவுட் பக்கமே கவனம் செலுத்த போவதாக சமீபத்திய பேட்டி ஒன்றிலும் அவர் சூசகமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அந்த பேட்டியில் அவர் கூறும்போது, “தென்னிந்திய திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது வடக்கே நடிப்புக்கு ஒரு எல்லை என எதுவும் இல்லை. தென்னிந்தியாவில் நிறைய கமர்சியல் படங்களில் நடித்திருந்தாலும் இப்போது ஹிந்தியில் மீண்டும் நுழைவதற்கான சரியான தருணம் என நினைக்கிறேன். கதையை மையப்படுத்திய படங்கள் நிறைய தேடி வருகின்றன. தென்னிந்தியாவில் கமர்சியல் படங்களில் நடிப்பது ஓகே தான் என்றாலும் கூட அதில் எனக்கு குறிப்பிட்ட எல்லை உண்டு. ஒரு நடிகையாக நான் அந்த எல்லைகளை கடந்து என்னுடைய அடையாளத்தை உருவாக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.




