துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை |
2025ம் ஆண்டில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையை 'டிராகன்' படம் பெற்றுள்ளது. தற்போது கிடைத்த பாக்ஸ் ஆபீஸ் தகவல் படி இப்படம் அஜித் நடித்து வெளிவந்த 'விடாமுயற்சி' படத்தின் வசூலைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.
'விடாமுயற்சி' படம் பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த வசூல் விவரமும் வெளியிடப்படவில்லை. ஆனால், சுமார் 150 கோடி வரை வசூலித்திருக்கலாம் என்கிறார்கள். அதேசமயம் 'டிராகன்' படத்தின் 100 கோடி வசூல் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். தற்போது இந்தப் படம் 150 கோடி வசூலைக் கடந்துள்ளதாம்.
தமிழ் சினிமாவின் டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித் பட வசூலை வளர்ந்து வரும் நடிகரான பிரதீப் ரங்கநாதன் 'ஓவர் டேக்' செய்தது குறித்து சினிமா வட்டாரங்களில் ஆச்சரியத்துடன் பேசி வருகிறார்கள்.
அஜித் நடித்து அடுத்து வர உள்ள 'குட் பேட் அக்லி' பட வசூல் சிறப்பாக இருக்க வேண்டுமென அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு 'குட் பேட் அக்லி' படம் 'குட்' ஆக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும், 'விடாமுயற்சி' போல 'பேட்' ஆக இல்லாமல் இருக்க வேண்டும்.