பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து | கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் | டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா | இன்னும் 2 மாதம் டல் சீசன் : பெரிய படங்கள் வராத நிலை | என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன்' பற்றி கமல் பதிவு | ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா | அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் |

தமிழில் ‛ஓ மை கடவுளே, டிராகன்' போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் அஸ்வத் மாரிமுத்து. இவர் அடுத்து இயக்கவுள்ள சிம்புவின் 51வது படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இருவரையும் திடீரென இவர் சந்தித்து பேசி உள்ளார்.
அதுதொடர்பான போட்டோக்களை சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ளார். அதோடு, "உண்மையாகவே நீங்கள் ஒரு ஐகான் மற்றும் ஒரு சிறந்த மனிதர். என் பணிக்கான அன்பு, அரவணைப்பு மற்றும் உங்களின் பாராட்டு அனைத்திற்கும் நன்றி அல்லு அர்ஜூன், இன்னும் நிறைய அர்த்தம் கொண்ட சந்திப்பாக அமைந்தது. இனிமையான நண்பராகவும், சிறந்த மனிதராகவும் இருப்பதற்கு நன்றி தேவி ஸ்ரீ பிரசாந்த்" என குறிப்பிட்டுள்ளார் அஸ்வத்.




