சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா |

அமெரிக்கா, கலிபோர்னியா மாகானத்தில் நடந்த 6வது சர்வதேச கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர்த்தி பிடித்தவர் வட சென்னையை சேர்ந்த காஜிமா. இவர் தந்தை ஆட்டோ டிரைவர். இவரின் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கை தி கேரம் குயின் என்ற சினிமாவாகிறது. இதற்கான படத்தொடக்கவிழா சென்னையில் இன்று நடந்தது.
தனது பயோபிக் தொடக்கவிழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டார் காஜிமா. இவர் கேரக்டரில் கன்னட திரையுலகை சேர்ந்த ரந்தியா பூமேஷ் நடிக்கிறார். முரளி இயக்குகிறார். காஜிமா தந்தையாக காளி வெங்கட் நடிக்கிறார். நாகேஷ் பாட்டில் தயாரிக்கிறார்.
இந்த விழாவில் காஜிமா பேசுகையில், ''விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள பணம் இல்லாமல் தவிக்கும் போது அப்பா இரவு பகலாக ஆட்டோ ஓட்டி அந்த பணத்தை சேர்த்தார். நான் கடுமையாக உழைத்து போட்டிகளில் வெற்றி பெற்றபின் அப்பாவுக்கு சொந்த வீடு வாங்கி கொடுத்திருக்கிறேன். திறமையை ஊக்குவித்தால் எல்லோராலும் வெற்றி பெற வைக்க முடியும். முயற்சியை விடாமல் தொடர வேண்டும். பல படங்களில் காளி வெங்கட்டை பார்த்து இருக்கிறேன். இன்றுதான் அவரை நேரில் பார்க்கிறேன். என் அப்பாவாக அவர் நடிப்பது மகிழ்ச்சி. என் சகோதரனும் என்னை போல் கேரம் விளையாட்டில் ஆர்வமாக இருக்கிறான். பலருக்கு பயிற்சி கொடுக்கிறான். அவனும் இந்த படத்தில் நடிக்கிறான்'' என்றார்.