பிளாஷ்பேக் : உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான “சாது மிரண்டால்” | எஸ்பிபி சிலை திறப்பு விழாவுக்கு ரஜினிக்கு அழைப்பு விடுத்த விஜய் யேசுதாஸ் | ரஜினிக்கு அம்மாவாக நடித்தவர் சட்டசபை தேர்தலில் போட்டி | அடுத்த ஹிந்தி படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கிய பூஜா ஹெக்டே | அனந்தபுரி ஆஞ்சநேயர் கோயிலில் விஜய தேவரகொண்டா, ராஷ்மிகா வழிபாடு | சாதி, மதம் இல்லாதவர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நடிகர் பார்த்திபன் | கைதி ஹிந்தி ரைட்ஸ் விவகாரம் : அஜய் தேவ்கன் மீது வழக்கு பதிவு செய்த ட்ரீம் வாரியர்ஸ் | மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி | 7ஜி ரெயின்போ காலனி 2 ரிலீஸ் எப்போது | தெலுங்கு படத்தை இயக்க தயாராகும் அஸ்வத் மாரிமுத்து |

தமிழில் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவ்னித் இயக்கத்தில் வெளியான படம் 'டூரிஸ்ட் பேமிலி'. முதல் படத்திலேயே இவர் வெற்றி முத்திரையை பதித்தவர். சமீபத்தில் அபிஷன் ஜீவ்னித் கதாநாயகனாக நடிக்கும் படத்தை அவரின் உதவி இயக்குநர் மதன் என்பவர் இயக்குகிறார் என அறிவித்தனர். இதில் கதாநாயகியாக மலையாள சினிமாவின் இளம் நடிகையான அனஸ்வரா ராஜன் நடிக்கின்றார். இந்த படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் பசிலன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று அனஸ்வரா ராஜன் பிறந்தநாள். இதை தனது முதல் தமிழ் படக்குழுவினருடன் கொண்டாடி உள்ளார் அனஸ்வரா. மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான இவர் இப்போது இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




