விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

தமிழகம் மட்டுமல்லாது பக்கத்து மாநிலமான கேரளாவிலும் சட்டசபைத் தேர்தல் சூடு பிடித்துள்ளது. வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி கேரளாவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஏற்கனவே சட்டசபை உறுப்பினர்களாக இருக்கும் சினிமா நட்சத்திரங்கள் சிலருடன் புதிதாக சிலரும் போட்டியாளர்களாக களத்தில் இறங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை அஞ்சலி நாயர், ட்வென்டி 20 என்கிற கட்சியின் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இணைந்து திருப்பணித்துறா தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதற்கான பிரச்சாரத்தை கடந்து சில நாட்களாக அவர் மேற்கொண்டு வருகிறார். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அஞ்சலி நாயர் மலையாளத்தில் பல படங்களில் கதாநாயகியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் நடித்து வந்தார். தமிழில் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்தின் அம்மாவாக ஒரு சில காட்சிகளின் நடித்திருந்தார். அது மட்டுமல்ல சித்தா படத்திலும் நடித்தவர் இவர்தான். இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடி சட்டசபைக்குள் நுழைவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.




