மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதனை வைத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கிய ‛டிராகன்' சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சிம்புவின் 51வது படத்தை இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இடையில் ரஜினி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு இவர் கதை கூறியுள்ளார் என்கிற தகவல் உள்ளது. இந்நிலையில் அஸ்வந்த் மாரிமுத்து, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த கதையில் பெரும்பாலும் தெலுங்கு கதாநாயகன் தான் நடிக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். சிம்பு அரசன் படத்தில் இருப்பதால் தெலுங்கு படத்தை இயக்கிவிட்டு சிம்பு படத்திற்கு வருவாரா அல்லது சிம்பு படத்தை முடித்துவிட்டு தெலுங்கு படத்தை இயக்குவாரா என்பது விரைவில் தெரிய வரும்.