மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

மலையாளத்தில் சமீபத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் சூப்பர் உமன் கதையம்சத்துடன் 'லோகா சாப்டர் 1 ; சந்திரா' திரைப்படம் வெளியானது. தென்னிந்திய சினிமாவிலேயே ஒரு கதாநாயகி சூப்பர் உமன் கதையம்சத்துடன் நடித்த முதல் படமாகவும் அது மட்டுமல்ல கதாநாயகியை மையப்படுத்தி உருவாகி 100 கோடி வசூலை தொட்ட முதல் படம் என்கிற பெருமையையும் இந்த படம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் கல்யாணி பிரியதர்ஷன் கடந்த வருடம் பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ரொம்பவே ஆர்வம் காட்டுகிறார்.
இது குறித்து தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் நாக் அஸ்வினை புகழ்ந்து பேசி உள்ள கல்யாணி பிரியதர்ஷன், “நாகி (நாக் அஸ்வின்) நமது சினிமா துறையில் மிகவும் படைப்புத்திறமை வாய்ந்த சிலரில முக்கியமான ஒருவர்” என்று கூறியதுடன், “நாகி.. இந்த பேட்டியை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் எனக்கு கல்கி படத்தில் ஒரு பாகமாக இருக்க வாய்ப்பு கிடைக்குமா ?” என்று சந்தடி சாக்கில் வாய்ப்பும் கேட்டுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.