சிரஞ்சீவி - நயன்தாரா படக்குழுவை சந்தித்த விஜய் சேதுபதி படக்குழு | ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி | மினி இட்லியாக சுவைக்கப்படணும் : பார்த்திபன் ஆசை |
மலையாள திரையுலகில் திறமையான இயக்குனராக 'கோதா, மின்னல் முரளி' என தனது சில படங்களிலேயே வெற்றி முகம் கண்டவர் இயக்குனர் பஷில் ஜோசப். அதேசமயம் கடந்த சில வருடங்களாகவே டைரக்ஷனை ஒதுக்கி வைத்து விட்டு பிசியான நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக நெகட்டிவ் கலந்த கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் சூப்பர் உமன் கதையம்சம் கொண்ட 'லோகா சாப்டர் 1 சந்திரா' என்கிற திரைப்படம் வெளியானது. இதில் கதாநாயகனாக இளம் நடிகர் நஸ்லேன் நடித்துள்ளார். தவிற முக்கிய கதாபாத்திரங்களில் போலீஸ் அதிகாரியாக நடன இயக்குனர் சாண்டியும் இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடிகர் டொவினோ தாமஸும் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் நடிகர் பஷில் ஜோசப் ஒரு பேட்டியில் கூறும்போது, “இயக்குனர் டொமினிக் அருண் இந்த படத்தின் கதை முழுவதையும் என்னிடம் சொல்லி இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் என்னை நடிக்கும்படி கேட்டார். ஆனால் சில காரணங்களால் என்னால் அதில் நடிக்க முடியாமல் போனது. அதில் வேறு ஒருவர் நடித்துள்ளார். அது எந்த கதாபாத்திரம் என நான் கூற விரும்பவில்லை. படம் வெளியானபின் தான் அதில் நடித்திருக்கலாமோ என தோன்றியது” என்று கூறியுள்ளார்.
ஆனாலும் ரசிகர்கள் இவர் நடிக்க மிஸ் பண்ணியது சாண்டி நடித்த போலீஸ் கதாபாத்திரத்திமா அல்லது கல்யாணியை காப்பாற்ற திடீரென சிறப்பு தோற்றத்தில் தோன்றும் டொவினோ தாமஸ் கதாபாத்திரத்திமா என விவாதம் நடத்தி வருகிறார்கள்.