அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. குறிப்பாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜை பலரும் திட்டி தீர்த்தனர். அவரால்தான் படம் ஹிட் ஆகவில்லை. படத்தில் கதை, திரைக்கதை சரியில்லை என விமர்சனம் செய்தனர். இதற்கு பதில் சொல்லாமல் இருந்தார் லோகேஷ். கூலி வெளியான சில நாட்களில் வெளிநாடு பறந்துவிட்டார். அடுத்து தான் ஹீரோவாக நடிக்கும் பட வேலைகளில் பிஸியாக இருந்தார். இப்போது கூலி விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார்.
அவர் பேசுகையில் 'எந்த படமாக இருந்தாலும் விமர்சனங்கள் வரும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். கூலி விமர்சனங்களை மதிக்கிறேன். கூலி படத்துக்கு பின் வேறு வேலைகளில் பிஸியாக இருந்தேன். அது குறித்து பேசவில்லை. ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் அடுத்த படத்தில் தவறுகளை சரி செய்வேன். அதேசமயம் விமர்சனங்களை தாண்டி கூலி படம் 500 கோடிக்கு மேல் வசூலித்ததாக தயாரிப்பாளர் சொன்னார். அதற்கு காரணமாக மீடியா, மீம்ஸ், யுடியூப்பர் ஆகியோருக்கு நன்றி. ஆகவே, ரசிகர்களுக்கு நன்றி சொல்கிறேன். என் அடுத்த படங்கள் குறித்து படக் கம்பெனி அறிவிக்கும்''' என்று பேசியுள்ளார்.
இந்த ஆண்டு தமிழில் அதிக வசூல் செய்த படமாக கூலி இருப்பது குறிப்பிடத்தக்கது.