அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

தமிழில் பிரியமுடன், இரணியன், யூத், ஜித்தன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வின்சென்ட் செல்வா. அதன் பின்னர் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளியான ஜித்தன் 2, தோட்டா, இங்கு என்ன சொல்லுது உள்ளிட்ட படங்கள் தோல்வியை தழுவியது. இதனால் இவர் படம் இயக்குவதில் இருந்து ஒதுங்கியிருந்தார். இதில் யூத் பட காலகட்டத்தில் வின்சென்ட் செல்வாவிடம், மிஷ்கின் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வின்சென்ட் செல்வா இயக்குனராக களமிறங்குகிறார். இதற்கான முன் தயாரிப்பு பணிகளில் அவர் உள்ளார். இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க மிஷ்கினை அணுகியுள்ளனர். மிஷ்கின் தன் குருநாதருக்கு நன்றி கடன் செலுத்தும் வாய்ப்பை உணர்ந்து இந்த படத்தில் நான் சம்பளம் இல்லாமல் நடித்து தருகிறேன் என வாக்குறுதி அளித்துள்ளாராம்.