ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? | கருப்பு - தமிழக வசூல் 175 கோடி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பெத்தி : முதல் நாள் வசூல் ரூ.135 கோடி | 8 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பி வரும் ஆஸ்னா ஜவேரி | மறுபிரவேசம் தொடங்கி விட்டது : ஈடன் மகிழ்ச்சி |

தமிழ் சினிமாவில் இன்றைய தலைமுறையினரின் பிரியமான இசையமைப்பாளராக மாறி உள்ளார் சாய் அபயங்கர். கட்சி சேர..., ஆச கூட ஆகிய ஆல்பம் பாடல்களில் பிரபலமான இவர் தற்போது தமிழில் பிஸியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கிறார்.
இந்த நிலையில் சாய் புதிதாக இசையமைத்து, பாடி, நடனமாடியுள்ள ஆல்பம் பாடலை வருகிற மார்ச் 5ல் வெளியிடுகிறார். ஏற்கனவே இவர் ஆல்பம் பாடல்களில் சம்யுக்தா, பிரீத்தி முகுந்தன், மீனாட்சி சவுத்ரி, சான்வீ மேக்னா ஆகியோருடன் இணைந்து நடனமாடினார். இந்த புதிய ஆல்பத்தில் ‛டிராகன்' பட புகழ் கயாடு லோகர் உடன் இணைந்து ஆடி, பாடி உள்ளார்.




