டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கவின், ப்ரீத்திஅஸ்ரானி நடிக்கும் கிஸ் படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. படம் குறித்து பேசிய ஹீரோ கவின், ''எனக்கு இது 6வது படம். இந்த படத்தின் தலைப்பு இயக்குனர் மிஷ்கினிடம் இருந்தது. அவர் தனது கதைக்கு எவ்வளவு யோசித்து இப்படி வைத்து இருப்பார் என புரியும். ஆனாலும், நாங்கள் தலைப்பை கேட்டபோது எங்களுக்காக எந்த நிபந்தனையும் இன்றி விட்டுக்கொடுத்தார். அதேபோல், பர்ஸ்ட் சிங்களை எங்களுக்காக பாடிக் கொண்டுத்த அனிருத், ஒரு வாய்ஸ் ஓவர் கொடுத்த விஜய்சேதுபதி, என்னாலே என்னாலே பாடலை எழுதிக் கொடுத்த விக்னேஷ் சிவன், ஒரு பாடல் பாடிக் கொடுத்த அருண்ராஜா ஆகியோருக்கும் நன்றி.
கிஸ் படத்தில் எத்தனை கிஸ் சீன்கள் இருக்கிறது, தியேட்டர் கவுன்டரில் போய் எப்படி டிக்கெட் கேட்பார்கள் என்று பலரும் கிண்டல் செய்கிறார்கள். படத்தின் தலைப்பு இப்படி இருந்தாலும், அனைத்து தரப்பும், குடும்பத்துடன் போய் பார்க்கிற படமாக கிஸ் இருக்கும். விடிவி கணேஷ் முக்கியமான கேரக்டரில் நடித்து இருக்கிறார். அவர் இப்போது தெலுங்கு படங்களில் பிஸியாக இருந்தாலும், எங்களுக்காக சென்னை வந்து படம் குறித்து பேசினார். அயோத்தியில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி ஹீரோயின். இந்த படம் கொஞ்சம் லேட்டானதால் பல உதவி இயக்குனர்கள் வேறு இடம் போய்விட்டார்கள். விஷால் என்பவர் மட்டும் இதே டீமில் இருந்தார். அவருக்கு ஸ்பெஷல் நன்றி. '' '' என்றார்