ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் மிஷ்கின் பேசுகையில், ''இப்போது படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றால் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். என்னுடைய முதல் படமான சித்திரம் பேசுதடியில் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அந்த படம் முதல் 7 நாட்கள் ஓடவில்லை. அப்புறம்தான் ஹிட் ஆனது. அந்த சமயத்தில் நான் உற்சாகம் இல்லாமல் இருந்தேன். படங்களுக்கு தலைப்பு வைப்பது, அதை டிசைன் செய்வது தனிக்கதை. அதில் மணிரத்னம் வல்லவர். அவரின் படத்தலைப்பு, அந்த டிசைன் வித்தியாசமாக இருக்கும். பார்வையாளர்களை டக்கென கவரும்.
அதேபோல், ஒரு இயக்குனர் தன் பட ஹீரோயின்களுக்கு பெயர் வைப்பதிலும் ரகசியம் இருக்கிறது. அவருக்கு பிடித்த பெயரை, பல காலம் மனதில் சொல்லி பார்த்த பெயரை தான் வைப்பார். என் முதல் படமான சித்திரம்பேசுதடி ஹீரோயின் பெயர் சாரு. அது, சத்யஜித் ரே பட பாதிப்பில் வைத்தேன். இப்போது நடிகராக சில படங்களில் நடிக்கிறேன். அந்த வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது. என்னை படக்குழுவினர் நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள்'' எனப் பேசினார்.




