அட்லியின் 'ராக்கா' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஷாருக்கான்! | சிவராஜ்குமாரை இயக்கும் எங்கேயும் எப்போதும் சரவணன் | விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் பாராட்டு | தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஜோவிகா! | 4வது 100 கோடியை தொடுமா எல்ஐகே | 1 கோடி இழப்பீடு கேட்டு தமன்னா தொடர்ந்த வழக்கு மீண்டும் தள்ளுபடி | 'அரசன்' பார்த்து அதிர்ச்சி அடைந்த தனுஷ் | முடிவுக்கு வரும் 'துரந்தர் 2' வசூல் | 'ஜனநாயகன்' லீக்: 3 முக்கிய குற்றவாளிகள் கைது | ஆங்கிலத்திலும் வெளியாகும் என்னுடைய முதல் படம் 'டாக்ஸிக்' தான் ; நடிகர் யஷ் |

அஜித் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. இதனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் தொடர்ந்து கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சர்வதேச போட்டியில் முக்கிய கவனம் பெற்று வரும் அஜித்தின் அணி, அதில் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அஜித் மீண்டும் தமிழ்நாட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டு இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தினாலும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது கார் பந்தயங்களுக்கு இடைவெளி விட்டு இருப்பதால் இந்த நேரத்தில் துப்பாக்கி பயிற்சி அவர் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது கொங்கு நாடு ரைபிள் கிளப் நிறுவனர் கே.எஸ்.செந்தில் குமாருடன் இணைந்து, திருப்பூர் வெள்ளக்கோவில் பகுதியிலுள்ள கேஆர்சி பயரிங் ரேஞ்சில் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டார். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.