டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தமிழில் கடந்த ஆண்டில் வெளிவந்த 'ரெபல்' படம் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை மமிதா பைஜூ. 'ரெபல்' படமும் கவனிக்கப்படவில்லை, அதில் நடித்த மமிதாவும் கண்டுகொள்ளப்படவில்லை. அதேசமயம், போன வருடம் அவர் நடித்து வெளிவந்த 'பிரேமலு' மலையாளப் படம் அவரை தமிழ் ரசிகர்களிடமும் கொண்டு போய் சேர்த்தது.
இந்த வருட தீபாவளிக்கு வெளிவந்த 'டியூட்' படம் மூலம் தமிழ் ரசிகர்கள் பலரிடமும் பிரபலமாகிவிட்டார் மமிதா. அடுத்து விஜய்யுடன் 'ஜனநாயகன்', சூர்யாவின் 46வது படம் ஆகியவற்றிலும், 'இரண்டு வானம்' படத்திலும் நடித்து வருகிறார்.
'டியூட்' வெற்றிக்குப் பிறகு மமிதா பைஜு, 15 கோடி சம்பளம் கேட்பதாக கடந்த வாரம் ஒரு செய்தி பரவியது. ஆனால், தற்போது ஹைதராபாத்தில் உள்ள மமிதாவிடம் அது பற்றி கேட்ட போது அதிர்ச்சியடைந்து அதை மறுத்தார். அது வெறும் வதந்தி என்றும் தன்னுடைய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தயாரிப்பாளர்களுக்குத் தெரியும், இது போன்ற வதந்திகளை திரை உலகினர் யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.