இயக்குனர் பாரதிராஜா காலமானார் | அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு |

தமிழ் சினிமாவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது பெண் இயக்குனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுதா கொங்கரா, கிருத்திகா உதயநிதி, ஐஸ்வர்யா, காயத்ரி புஷ்கர், ஹலீதா ஷமீம், லட்சுமி ராமகிருஷ்ணன், சவுந்தர்யா ரஜினிகாந்த் என ஏராளமான பெண் இயக்குனர்கள் உள்ளார்கள். இவர்கள் வரிசையில் இடம் பிடித்தவர் மேக்னா.
'மலேசியாவில் 999', 'ஹார்பர்', 'லக்கி நன்' ஆகிய படங்களை இயக்கி, தயாரித்துள்ளார். தற்போது பி.வி.காவியன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கல்யாண மன்னன்' படத்தின் நாயகியாக நடித்து, தயாரித்து வருகிறார். அவருடன் மீனாட்சி, தீபிகா, சினேகா, ரன்விதா சென்னப்பா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இதுகுறித்து மேக்னா கூறும்போது, ''சினிமாவில் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு தற்போது அதிகரித்துள்ளது. இயக்கம் தாண்டி பல துறைகளிலும் அவர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள். எனக்கு இயக்கம் தாண்டி நடிப்பிலும் எனக்கு ஆசை உண்டு. அதை இந்த படத்தில் தீர்த்துக் கொண்டுள்ளேன். இது காமெடி கலாட்டா திரைப்படம். 5 பெண்களைத் திருமணம் செய்யும் ஒருவனது திண்டாட்டத்தை முழு நீள நகைச்சுவையாக சொல்லப்பட்டுள்ளது. இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்துவேன்'', என்றார்.