ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

ஆன்மிகம் கலந்த படங்களை இந்திய ரசிகர்கள் மிகவும் விரும்பி ரசிக்கிறார்கள். அதற்கு மற்றுமொரு உதாரணமாக கடந்த வாரம் வெளிவந்த தெலுங்குப் படமான 'மிராய்' படம் நிரூபித்துள்ளது.
கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, ரித்திகா நாயக், மஞ்சு மனோஜ், ஸ்ரேயா மற்றும் பலர் நடித்த இந்தப் படம் தற்போது 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். அடுத்தடுத்து இரண்டு 100 கோடி வசூல் படங்களைத் தந்துள்ளார் படத்தின் நாயகன் தேஜா. இதற்கு முன்பு அவர் நடித்து வெளிவந்த 'ஹனுமன்' படம் 300 கோடி வசூலைப் பெற்றிருந்தது.
'மிராய்' படம் இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் நல்ல வசூலைக் குவித்து வருகிறது. அங்கு 2 மில்லியன் யுஎஸ் டாலருக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளது. இப்படத்திற்கு தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தது படத்திற்கு பெரும் ஆதரவாய் அமைந்தது.