டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

கவின், பிரீத்தி அஸ்ரானி நடிப்பில் நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ள படம் 'கிஸ்'. நாளை மறுநாள் (செப்.,19) ரிலீசாகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன், நடிகர்கள் கவின், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது மேடையில் பேசிய விடிவி கணேஷ், ''இந்த படத்தின் தெலுங்கு டீசரை எனக்கு இயக்குனர் சதீஷ் காண்பித்தார். அதில் என் குரலுக்கு பதில் வேறொருவர் மிமிக்ரி பேசியுள்ளார். இதுப்பற்றி இயக்குனரிடம் கேட்டால் நீங்கள் பிஸியாக இருந்ததால் வேறொருவரை பேச வைத்திருப்பார்கள் போல, எனக்கே தெரியல என்கிறார். அதெல்லாம் ரொம்ப தப்பு. நாளை காலையில் கூட வந்து நானே டப்பிங் பேசி தருகிறேன்'' என்றார்.
மேலும் அவர் பேசுகையில், ''தெலுங்கில் நான் இப்போது நாக சைதன்யா, சிரஞ்சீவி உள்ளிட்டவர்களுடன் 8 படங்களில் நடித்து வருகிறேன். எனவே, எனக்கு தெலுங்கு பேச தெரியும் இருந்தும் குரலை பயன்படுத்தாமல் விட்டுள்ளனர்'' என்றார். உடனே குறுக்கிட்ட நாயகன் கவின், ''உங்களின் முதல் கிஸ் பற்றிய அனுபவத்தை சொல்லுங்கள்'' என பேச்சை மாற்றினார். அதன்பின்னர், அந்த டாபிக் பற்றி பேச ஆரம்பித்தார் விடிவி கணேஷ்.
அதற்கு முன்னதாக, ''தெலுங்கு பதிப்பில் நான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். தெலுங்கு முக்கியம். ப்ளீஸ், என் கேரியரை நாசமாக்காதீர்கள். தெலுங்கு டப்பிங் பேச எனக்கு கொஞ்ச நேரம் கொடுத்தால் போதும்'' என யாருடனோ விடிவி கணேஷ் போனில் பேசும் வீடியோவும் வெளியாகியிருந்தது.
தமிழில் 'பீஸ்ட்' படத்தில் சதீஷ், விடிவி கணேஷ் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்திருந்தனர். அந்த வகையில் தான் இயக்குனராக அறிமுகமான முதல் படத்தில் விடிவி கணேஷை நடிக்க வைத்திருந்த சதீஷ், அவருக்கு தெலுங்கு டப்பிங் வாய்ப்பு வழங்காமல் விட்டதும், அதனை மேடையிலேயே தனது அதிருப்தியை கணேஷ் வெளிப்படுத்தியதும் பேசு பொருளாகியுள்ளது.