முன்கூட்டியே ஜன., 10ல் ‛பராசக்தி' ரிலீஸ் : விஜய் படத்துடன் நேரடியாக மோதும் சிவகார்த்திகேயன் | சத்ய சாய்பாபாவின் அற்புதங்களை சொல்லும் ‛அனந்தா' : ஜன.,20 முதல் ஓடிடியில் வெளியீடு | 'ரேஸ் நடிப்பு அல்ல.. ரியல்' : அஜித்தின் புதிய வீடியோ வைரல் | ஹிந்தியில் திரிஷ்யம் 3 ரிலீஸ் தேதியை அறிவித்த அஜய் தேவ்கன் | முதல் படம் வெளியாகும் முன்பே சிறை இயக்குனருக்கு கார் பரிசு | நடிகர் மாதவன் பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை | போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடுவிப்பு | துபாய் பயணத்தை ரத்து செய்துவிட்டு நடிகர் சீனிவாசனுக்கு அஞ்சலி செலுத்திய பார்த்திபன் | அவதார் அடுத்த பாகம் பற்றி இப்ப கேட்காதீங்க : ஜேம்ஸ் கேமரூன் | சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வீடியோ வெளியானது! |

குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புது படம் ஜனவரி 26 முதல் தொடங்குகிறது. ஜிப்ரான் இசையில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் வித்தியாச கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகிறது.
கே. எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய குரு சரவணன், பின்னர் கே. எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் அவரையே நாயகனாக வைத்து 'கூகுள் குட்டப்பா' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தனது மூன்றாவது படைப்பாக இந்த புதிய படத்தை இயக்கவுள்ளார்.
இரண்டு ஹீரோ கொண்ட இந்த படத்தில், கான்ஜூரிங் கண்ணப்பன்', 'சட்டம் என் கையில்' போன்ற படங்களுக்குபின் காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கிறார். இதில் ஆக்ஷனுக்கு மாறுகிறார்
இந்த படத்தின் மூலம் மற்றொரு கதாநாயகனாக, பிரபல தெலுங்கு நடிகர் சாய்குமாரின் மகனுமான ஆதி சாய்குமார், தமிழ் திரையுலகில் முதல் முறையாக அறிமுகமாகிறார். இதில் கதாநாயகியாக மலையாள நடிகை சரண்யா நடிக்கவுள்ளார். சரவணன், சிங்கம் புலி, பிளாக் பாண்டி, தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.