பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

மலையாள திரையுலகில் பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த பல வருடங்களுக்கு முன்பே இவர் படப்பிடிப்பு தளத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டு போலீஸில் கைதாகி பின்னர் விடுதலை ஆனவர். ஆனாலும் இவரை சுற்றி போதைப்பொருள் சர்ச்சை சுழன்று கொண்டே இருந்தது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் கோழிக்கோடு பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் சோதனையின் போது பிடிபட்ட பெண் ஒருவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு தாங்கள் ரெகுலராக போதைப்பொருள் சப்ளை செய்வதாக கூறினார்.
இன்னொரு பக்கம் மலையாள நடிகை வின்சி அலோசியஸ் என்பவர் சாக்கோ உடன் ஒரு படத்தில் இணைந்து நடித்தபோது அவர் போதை பயன்படுத்தி தன்னிடம் அத்துமீறி நடந்து கொள்ள முயற்சித்தார் என்றும் புகார் அளித்தார். இதனையடுத்து பதியப்பட்ட வழக்கில் அந்த சமயத்தில் தன்னை விசாரிக்க வந்த போலீசாரிடம் தப்பிப்பதற்காக ஹோட்டல் அறையில் இருந்து குதித்து ஷைன் டாம் சாக்கோ தப்பி சென்றது பரபரப்பாக செய்திகளில் அடிபட்டது. அதன்பிறகு தலைமறைவான அவர் மீண்டும் போலீசில் ஆஜராகி தனது விளக்கத்தை அளித்தார். இதனை தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் ஷைன் டாம் சாக்கோவிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பாரன்சிக் தடயங்களில் இருந்து அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது.. இதனைத் தொடர்ந்து இந்த போதைப்பொருள் வழக்கிலிருந்து நடிகர் ஷைன் டாம் சாக்கோ தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.