இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” | பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… | ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து | தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? | நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி | பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவதா ? நிதி அகர்வால் கமெண்ட் | ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' |

நடிகர் அஜித்குமார், 'குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து கார் ரேஸில் பிஸியாக பங்கேற்று வருகிறார். கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் பங்கேற்ற அஜித்குமார், மற்றும் அவரது 'அஜித்குமார் ரேஸிங்' அணி, சிலவற்றில் முதல் மூன்று இடங்களுக்கு வந்தும் பெருமை சேர்த்தது.
இதற்கிடையே தனது கார் ரேஸ் அனுபவங்களை ஆவணப்படமாக உருவாக்க நடிகர் அஜித்குமார் திட்டமிட்டார். இதற்காக இயக்குனர் ஏ.எல். விஜயை அழைத்த அஜித், ஆவணப்படம் உருவாக்கும் பணியை ஒப்படைத்தார். மலேசியா சென்ற இயக்குனர் விஜய், அங்கு அஜித்தை சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில், அஜித் கார் ரேஸ் பற்றிய கிளிம்ப்ஸ் வீடியோவை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டார். அதில், அஜித்குமாரின் ரேஸிங் பயணத்தின் சில முக்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர் காரில் அதிவேகத்தில் பயணிப்பது, பயிற்சிகள், சவால்களை எதிர்கொள்வது, போட்டிகளில் பெற்ற வெற்றிகள், சவால்கள் மற்றும் அவரது உழைப்பு ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
'ரேஸ் நடிப்பு அல்ல.. ரியல்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த கிளிம்ப்ஸ் வீடியோ, அவரது ஆவணப்படத்தின் டீசர் என்றும் சொல்லப்படுகிறது. எப்படியோ அஜித் ரசிகர்களுக்கும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களுக்கும் இந்த வீடியோ உற்சாகத்தை கொடுத்துள்ளது என்பது மட்டும் உண்மை.