பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

'அமரன்' படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அவரது 55வது படத்தின் அறிவிப்பு கடந்த வருடம் வெளிவந்தது. பிரபல பைனான்சியர், தயாரிப்பாளர், வினியோகஸ்தருமான மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்க பூஜை நடத்தி அறிவிப்பை வெளியிட்டார்கள்.
அதன்பின் அந்தப் படம் பற்றிய அப்டேட்ஸ் அதிகமாக வரவில்லை. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அப்படத்தின் தயாரிப்பிலிருந்து அன்புச்செழியன் விலகியதாக செய்திகள் வந்தன. தற்போது அந்தப் படத்தை அவரிடமிருந்து சுமார் 30 கோடிக்கும் அதிகமாக பணம் கொடுத்து தனுஷ் தன் வசப்படுத்தியுள்ளார் என்று சொல்கிறார்கள்.
அன்புச்செழியனுக்கு தனுஷ் தரவேண்டிய கடன் தொகை, இந்த தனுஷ் 55வது படத்திற்கான இதுவரை செய்த செலவுகள் 30 கோடி பிளஸ் என்கிறார்கள். தனுஷுக்கு இந்த வருடம் தமிழில் இயக்கிய படமும், நடித்த படமும் சரியாகப் போகவில்லை. அதனால், இந்த 55வது படத்தை பெரிதும் நம்புகிறாராம். எனவேதான் அதை கைவிட மனமில்லாமல் அவரே பேச்சு வார்த்தை நடத்தி வாங்கிவிட்டதாகத் தகவல்.
விரைவில் அவருடைய சொந்த நிறுவனமான உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் பற்றிய புதிய அப்டேட் வெளியாகலாம்.




