எனக்கு நட்டம் தான், துரந்தர் 2 படத்தில் நடிக்காதது குறித்து அனில் கபூர் விளக்கம் | நான் தயாரித்த படங்களால் நஷ்டம் : முதல் முறையாக மனம் திறந்த விஜய்சேதுபதி | சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' பட டீசர் நாளை மறுநாள் ரிலீஸ் | பேச்சுத்துணைக்காக சம்பளம் கொடுத்து சிங்கம்புலியை மலேசியா அழைத்துச் சென்ற அஜித் | மம்முட்டிக்கு ஒரு நியாயம், சாதாரண நடிகருக்கு ஒரு நியாயமா ? : முதல்வர் மீது நடிகர் குற்றச்சாட்டு | லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளில் வெளியான டிசி படத்தின் புதிய போஸ்டர் | ராஷ்மிகாவின் காக்டெய்ல் 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | 'ப்ரோ கிளப்' ஆக மாறும் 'ப்ரோ கோட்' ? | சிங்கப்பூர் சுற்றுலாவில் சிவகார்த்திகேயன் | நடிகர்களுக்கு, ஓடிடிக்கு கட்டுப்பாடு : சென்னை கூட்டு கூட்டத்தில் முக்கியமான முடிவு |

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள முன்னணி நடிகர்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அவர்களது இளமை மற்றம் நடுத்தர வயது காலங்களில் தமிழைத் தவிர மற்ற மொழிகளிலும் நடித்து பிரபலமாக இருந்தனர். குறிப்பாக உலக அளவில் அப்போது அதிக கவனத்தை ஈர்த்த ஹிந்தி மொழிப் படங்களில் அவர்கள் நடித்தனர். ஒரு கட்டத்திற்குப் பிறகுதான் அங்கிருந்து விலகி வந்து தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதற்கடுத்து வந்த நடிகர்கள் சிலர் ஹிந்தியில் நடித்தாலும் அவர்களைப் போல பிரபலமாகவில்லை. தற்போதுள்ள முன்னணி நடிகர்களில் தனுஷ் மட்டுமே ஹிந்திக்கும் சென்று பிரபலமாகியுள்ளார். அவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த 'தேரே இஷ்க் மே' 100 கோடி வசூலைக் கடந்த படமாக அமைந்தது. தெலுங்கிலும் 'குபேரா' படத்தில் நடித்து அங்கும் 100 கோடி வசூலைக் கடந்தார்.
'பாகுபலி' படத்திற்குப் பிறகு பான் இந்தியா பிரபலம் என்பது பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. தங்களது சொந்த மொழியை விட்டு மற்ற மொழிகளிலும் பிரபலமாக வேண்டும், வெற்றி பெற வேண்டும் என நடிகர்கள் நினைக்கிறார்கள். அந்த விதத்தில் தெலுங்கில் பிரபாஸ், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோரும், கன்னடத்தில் யஷ், ரிஷப் ஷெட்டி ஆகியோரும் பிரபலமானார்கள்.
ஆனால், தமிழில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிம்பு, சிவகார்த்திகேயன் என யாருமே அந்த பிரபலத்தை இந்த 2025ம் ஆண்டிலும் தொட முடியாமல் இருக்கிறார்கள். தனுஷும் அந்தப் பட்டியலில் இருந்தாலும் அவர் தனித் தனியே தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 100 கோடி வசூலைப் பெற்றுவிட்டார். தற்போதைய சூழலில் தமிழைக் கடந்து மற்ற மொழிகளில் பிரபலமாக இருப்பவர் என்பதில் அவர்தான் முன்னணியில் இருக்கிறார்.
பான் இந்தியா வெற்றி, 1000 கோடி வசூல் என்பது தமிழ் சினிமாவில் இந்த ஆண்டும் நடைபெறாமல் போய்விட்டது. அடுத்த 2026ம் ஆண்டிலாவது அது நடக்கிறதா என்று பார்ப்போம்.




