நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

நடிகர் தனுஷிற்கு இந்த 2025ம் ஆண்டு ஓரளவு சிறப்பான ஆண்டு என்றே கூறலாம். ஏனெனில், இந்தாண்டு தனுஷ் நடித்து தெலுங்கில் குபேரா, ஹிந்தியில் தேரே இஸ்க் மே, தமிழில் இட்லி கடை என மூன்று படங்கள் வெளியானது. கூடுதலாக, தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை என இரண்டு படங்களும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தனுஷ் போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு முதல் பாதியில் திரைக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.
2026 ஏப்ரல் மாதத்தில் தனுஷ், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. மேலும், 2026 ஜூலையில் வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இவை தனுஷ் தற்காலிகமாக அடுத்த ஆண்டிற்கான திட்டமாக முடிவு செய்து வைத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.