டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தத் தவறியதால் தமிழகத்தில் நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் மரணமடைந்தனர். அதன் பிறகு கூட்டம் கூடினாலே மக்களுக்கு ஒரு பயம் வந்துவிட்டது. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் இன்னமும் சில நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அப்படி ஒரு நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
மாருதி இயக்கத்தில், பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'தி ராஜா சாப்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'சஹானா சஹானா' பாடல் வெளியீடு நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் உள்ள லூலு மாலில் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்த பின் தனது காரில் ஏற நிதி அகர்வால் நடந்து வந்த போது அவரை கூட்டம் சூழ்ந்து கொண்டு நெருக்கியது. திக்கித் திணறி அந்த கூட்டத்தில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அவர் மிகவும் சிரமப்பட்டுள்ளார். அதிலிருந்து எப்படியோ சிரமப்பட்டு வெளியேறி காரில் ஏறி உட்கார்ந்தார்.
காரில் உட்கார்ந்த பின் கோபமாக ஏதோ பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பிரம்மாண்டப் பான் இந்தியா படத்தை எடுத்த தயாரிப்பாளர்கள் நிகழ்ச்சிக்கு சரியான விதத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.