Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓடிடியில் கடுமையாக டிரோல் செய்யப்படும் 'தி ராஜா சாப்'

07 பிப், 2026 - 12:46 IST
எழுத்தின் அளவு:
The-Raja-Saab-is-being-trolled-heavily-on-OTT
Advertisement

'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பான் இந்தியா நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றார் தெலுங்கு நடிகரான பிரபாஸ். அதன்பிறகு அவர் நடித்து வெளிந்த 6 படங்களில் 2 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த சங்கராந்திக்கு அவர் நடித்து வெளிவந்த படம் 'தி ராஜா சாப்'. மாருதி இயக்கத்தில் தமன் இசையமைப்பில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் இப்படத்தின் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். சுமார் 400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் 200 கோடிக்கும் சற்று கூடுதலாக மட்டுமே வசூலித்தது.

தமிழில் வெளிவந்த 'அரண்மனை, தில்லுக்கு துட்டு' ஆகிய படங்களின் கலவையாக இந்தப் படம் இருந்ததென இங்கு விமர்சனங்கள் வெளிவந்தன. ஒரு பான் இந்தியா ஹீரோவை வைத்து எப்படி இப்படி ஒரு படத்தை எடுத்தார்கள் என தெலுங்கிலும் விமர்சித்தார்கள். பொதுவாக பிரபாஸ் நடிக்கும் படம் என்றாலே விரும்பிப் பார்க்கும் ஹிந்தி ரசிகர்கள் கூட இந்தப் படத்தைக் கண்டுகொள்ளவில்லை.

இப்படம் நேற்று ஓடிடி தளத்தில் வெளியானது. படம் வெளிவந்த போதே கடுமையான விமர்சனங்களை சந்தித்த படம் தற்போது கடுமையான 'டிரோல்களை' சந்திக்க ஆரம்பித்துவிட்டது. படத்தின் காட்சிகள் பலவற்றைத் தனித்தனியாகப் பதிவிட்டு ரசிகர்கள் கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்தப் படம் ஓடவில்லை என்றாலும் பிரபாஸ் கைவசம், 'பவுசி, ஸ்பிரிட், சலார் 2' ஆகிய படங்கள் உள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஓடிடியில் வெளியாகும் பொங்கல், சங்கராந்தி படங்கள்ஓடிடியில் வெளியாகும் பொங்கல், ... வாய்ப்பை வீணாக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' வாய்ப்பை வீணாக்கும் 'லவ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap