சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் கவின். தற்போது இவர் கைவசமாக 'மாஸ்க், ஹாய்' ஆகிய படங்கள் உள்ளன. இவை அல்லாமல் கவின் அடுத்து 'தண்டட்டி' படத்தை இயக்கி அனைவரின் கவனத்தை பெற்ற இயக்குனர் ராம் சங்கயா இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை 'லப்பர் பந்து, சர்தார்' போன்ற படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நிறைவு பெற்றும் படப்பிடிப்பு தொடங்குவதில் சுணக்கம் நீடித்து வருகிறது. இது குறித்து என்ன காரணமென்று நாம் விசாரித்தபோது, இப்படம் முழுக்க முழுக்க ஒரு கிராமத்து பின்புலத்தில் உருவாகும் படம் என்பதால் கதாநாயகியை தேடிக் கொண்டிருகின்றனர், இன்னும் அமையவில்லை. பெரும்பாலான இளம் நாயகிகள் கிராமத்து பெண் வேடத்தில் நடிக்க மறுத்துள்ளனர்.