
இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மருத்துவமனையில் அனுமதி
இரட்டை இசையமைப்பாளர்களான சங்கர் கணேஷ், ‛மகராசி" படத்தின் மூலம் இசையமைப்பாளர்கள் ஆனார். தொடர்ந்து இவர்கள் இசையில் பல்வேறு வெற்றி படங்கள் வெளியாகின. இவர்களில் சங்கர் மரணம் அடைந்துவிட்டார். கணேஷ் சினிமாவை விட்டு விலகி ஓய்வில் இருக்கிறார். தனது இசை கூட்டாளி சங்கர் மறைந்த பிறகும், தனது பெயரை சங்கர் கணேஷ் என பெருமையோடு அழைத்து வருகிறார்.
இந்நிலையில் கணேஷிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். ஏற்கனவே அவருக்கு இதய பிரச்னை இருந்தாலும், மழை, குளிர் காரணமாகவும் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது என்று குடும்பத்தினர் கூறி உள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!