கை கட்டியபடி பேசுவார், வெள்ளை உடைகளை விரும்பி அணிவார்: பணிவுக்கும் உபசரிப்புக்கும் புகழ் பெற்ற ஏவி.எம்.சரவணன் | பிரபலங்கள் பட்டியல் 2025: தமிழ் நடிகர்கள், நடிகைகளுக்கு இடமில்லை… | சாய் பல்லவியால் மறுவாழ்வு பெற்றேன் ; இசையமைப்பாளர் நெகிழ்ச்சி | திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி |

பிரபல தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் இன்று சென்னையில் காலமானார். அவரை பற்றி திரையுலகினர் கூறுகையில் 175க்கும் அதிகமான படங்களை தயாரித்தவர் ஏவிஎம் நிறுவனத்தை சேர்ந்தவர் சரவணன். இந்தியளவில் 100 படங்களை தயாரித்தவர்கள் மிகக்குறைவு. இப்படிப்பட்ட பெருமை கொண்ட பாரம்பரிய நிறுவனத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவரின் பணிவும், அவரின் எளிமையும் திரைத்துறையில் அவ்வளவு பிரபலம்.
அனைவரையும் மரியாதையாக அழைப்பார், மரியாதையாக நடத்துவார். குறிப்பாக, தனது கைகளை கட்டிக்கொண்டு பேசுவது அவர் ஸ்டைல். சில சமயம் விருந்தினர்களை உட்கார வைத்து அவர் எழுந்து நின்று பேசுவார். எப்போதும் வெள்ளை நிற உடைகளை அணிவார். சினிமா நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளுக்கு சிம்பிளாக வந்து செல்வார். முன்னணி நடிகர்கள், நடிகைகளை வைத்து படம் தயாரித்து இருந்தாலும், தங்கள் பட செய்திகள் வந்தால், தன்னை பற்றி செய்திகள் வந்தால் சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனங்கள், செய்தியாளர்கள், போட்டோகிராபர்களுக்கு நன்றி கடிதம் எழுதி அனுப்புவதை வாடிக்கையாக வைத்து இருந்தார்.
சினிமா மேடைகளில் மிக சுருக்கமாக தெளிவாக பேசுவார். இதுவரை யாரையும் தவறாக பேசியது இல்லை. எந்த மீடியாவிலும் யாரையும் விமர்சித்து, தவறாக பேட்டி கொடுத்தது இல்லை. பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தாலும் பந்தா இல்லாத அவரை போன்ற தயாரிப்பாளர்களை இனி பார்ப்பது அபூர்வம் என்கிறார்கள்.