குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு | 75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு |

சமீபகாலமாக இளையராஜா இசையில் உருவான பாடல்களை மற்ற இசையமைப்பாளர்கள் தாங்கள் இசையமைக்கும் படங்களில் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்ச குருவி, ஒத்த ரூபா தாரேன் போன்ற பாடல்கள் இடம் பெற்றன. தனது இசையில் உருவான பாடல்களை அனுமதியின்றி மற்றவர்கள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று இளையராஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து பாடலை பயன்படுத்த இடைக்கால தடை போட்டார்கள்.
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் ஒரு மனு தாக்கல் செய்தார்கள். இந்நிலையில் இன்று அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தள்ளுபடி செய்துவிட்டது. அதோடு, தன்னுடைய பாடல்களை மற்றவர்கள் பயன்படுத்தினால் அதை தடுப்பதற்கும், பாடலை ரீமிக்ஸ் செய்வதை தடுக்கவும் இளையராஜாவுக்கு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்துள்ள நீதிபதி, இடைக்காலத்தடையை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்.
இதேபோல் இளையராஜா இசையில் உருவான கருத்த மச்சான் பாடல் டியூட் படத்தில் ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தப் பட்டதற்கும் சமீபத்தில் நீதிமன்றம் தடை போட்டது குறிப்பிடத்தக்கது.