வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளது போலவே, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. தெலுங்குத் திரையுலகத்தில் ஒரு காலத்தில் இளையராஜா - சிரஞ்சீவி கூட்டணி என்றாலே பாடல்கள் சூப்பர் ஹிட்டாகும், இசையும், அதில் சிரஞ்சீவியின் நடனமும் இப்போது வரையிலும் ரசிகர்களைக் கவர்ந்தவையாக இருக்கிறது.
மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சிரஞ்சீவியின் மனைவி சுரேகா கலந்து கொண்டார். அவர் திரும்பத் திரும்பக் கேட்டும் சிரஞ்சீவியின் பாடல் எது என்ற கேள்வியை முடிப்பதற்கு முன்பே சுரேகா, 'மல்லி மல்லி இதி ராணி ரோஜூ' பாடல் என உடனடியாக பதிலளித்தார்.
1986ம் ஆண்டு கோதண்டராமி ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, சுஹாசினி, ராதா ஆகியோர் நடிக்க இளையராஜா இசையில் வெளிவந்த 'ராக்சஷடு' என்ற படத்தில் இடம் பெற்ற பாடல் அது. வெட்டூரி எழுதி, எஸ்பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி பாடிய அந்த மெலடி பாடலுக்கு சிரஞ்சீவி, சுஹாசினி ஆகியோர் நடனமாடி நடித்திருந்தனர்.
அந்தப் படம் தமிழில் 'ராட்சசன்' என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியான போது, 'மல்லி மல்லி இது ஜாதி மல்லி' என பாடலும் தமிழில் எஸ்பிபி பாலசுப்ரமணியம், சித்ரா ஆகியோர் பாட மொழி மாற்றம் செய்யப்பட்டது. நேரடி தமிழ்ப் படத்தின் பாடல் போல இந்தப் பாடலும் சூப்பர் ஹிட்டான பாடலாக அமைந்தது.




