ஆங்கிலப் படத்தில் இளையராஜாவின் சிம்பொனி | பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் காட்டு ராணியாக நடித்த பாலிவுட் நடிகை | 'அரசன்' படத்தில் இணைந்த விஜய் சேதுபதி | பிளாஷ்பேக் : பாலச்சந்தரை பயமுறுத்திய நெகட்டிவ் சென்டிமென்ட் | புதிய சாதனை படைக்கத் தவறிய பிரபாஸின் 'ரிபெல் சாப்' பாடல் | நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் |

5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் என்ற லண்டன் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'எ பியூட்டிபுல் பிரேக்கப்' அஜித்வாசன் உக்கினா இயக்கியுள்ளார். இந்தப் படம் 2026 காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் இளையராஜாவின் சிம்பொனி இசை இடம் பெறுகிறது. மாஸ்கோ போ டை ஆர்கெஸ்ட்ரா குழுவுடன் இணைந்து இந்த சிம்பொனி இசையை இளையராஜா அமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் லண்டனைச் சேர்ந்த கலைஞரான ரக்ஷ் திரைத்துறையில் அறிமுகமாகிறார். போலந்து நாட்டின் வார்சாவைச் சேர்ந்த மாடில்டா பாஜர் நாயகியாக நடிக்கிறார். அர்ஜுன் மற்றும் ஜீவாவுடன் இணைந்து 'அகத்தியா' திரைப்படத்தில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
படம் குறித்து இயக்குனர் அஜித்வாசன் உக்கினா கூறும்போது, 'இங்கிலாந்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது இதுவரை சொல்லப்படாத கதையை மர்ம முடிச்சுகளைக் கொண்டு காட்சிகள், நடிப்பு மற்றும் இசையின் உதவியோடு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தங்கள் காதலை நேர்மறையான வகையில் முறித்துக் கொள்ள தனிமையான எஸ்டேட்டுக்கு செல்லும் ஒரு ஜோடி அங்கு நடைபெறும் சம்பவங்களால் எத்தகைய மாற்றங்களை சந்திக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை" என்றார்.