ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

சமீப காலமாக தமிழகத்தில் பிரபலங்களின் வீடு, அலுவலகங்களில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுப்பது தொடர்ந்து வருகிறது. இவ்வாறான மிரட்டல் விடுக்கும் நபர்களை பிடிக்க போலீசார் முயன்று வருகின்றனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவின் அலுவலகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள இளையராஜாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார். இதனையடுத்து உடனடியாக மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அலுவலகத்தின் அனைத்து இடங்களிலும் மேற்கொண்ட சோதனையில் எந்த வெடிகுண்டும் கிடைக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. திடீரென இளையராஜாவின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது, அதிகாரிகளின் சோதனை காரணமாக சிறிது நேரம் அதனை சுற்றியுள்ள இடங்களில் பரபரப்பான சூழல் நிலவியது.